கோலத்தின் சிறப்புகள்

கோலத்தின் சிறப்புகள்

bookmark

கோலம் - இப்பெயரை கேட்டவுடன் அனைவர் மனதிலும் தோன்றக்கூடிய ஒரே விஷயம் எதுவென்றால் அது அழகு தான். ஆனால் அழகுக்காக மட்டும் கோலம் போடுகிறார்கள் என்றால் கிடையாது, பல மருத்துவக் காரணங்களுக்காகவும், காலம் காலமாக கடைப்பிடித்து வரும் சம்பிரதாயத்திற்காகவும் கோலம் போடுகிறார்கள்.


★ கோலம் என்பதற்கு பல பொருள் இருந்தாலும் அலங்கரித்தல் என்ற பொருளே முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே வீட்டின் வாசலில் கோலம் போடும் பொழுது அது வீட்டையே அலங்கரிப்பதால் தினந்தோறும் வாசலில் கோலம் போடப்படுகிறது.

★ கோலம் போடுவதில் கூட பலர், சில விஷயங்களைக் காலம் காலமாக கடைப்பிடித்து தான் வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று எதுவென்றால் அதிகாலையில் வீட்டிற்கு முன், பிரம்ம முகூர்த்தம் என சொல்லப்படுகிற அதிகாலை 4.30 - 6.00 மணிக்குள் கோலம் போடுவது தான். இந்த செயல்முறையை நமக்கு நம் பெரியோர்கள் தான் கற்று கொடுத்தார்கள்.

★ அதிகாலையில் தான் கோலம் போட வேண்டுமா? என்று நீங்கள் எண்ணலாம். காரணம் இல்லாமல் நம் பெரியோர்கள் நமக்கு இதை கற்றுக்கொடுக்கவில்லை.

★ அதிகாலையில் கோலம் போடும் பொழுது காற்றில் ஓசோன் வாயு கலந்திருப்பதால் நம் உடலுக்குத் தேவையான பிராணவாயு முழுமையாகக் கிடைக்கிறது. இதனால் நாம் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் காண்போம்.