கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்

கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்

bookmark

★ கோலம் போடுவதால், குறிப்பாக பெண்களுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. அவற்றை அறிந்துக் கொள்வோம்.

★ காலையிலேயே குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதால் உடலில் இருக்கும் இரத்த ஓட்டமானது சீராகிறது.

★ கோலத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை, ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளி என கோடுகளால் இணைக்கும் கோலம் உங்கள் சிந்தனை ஒருநிலைப்படுத்துவதோடு உங்கள் சிந்தனைச் சிதறல்களை குறைக்கும் ஒரு பயிற்சியாகும்.

★ அனுதினமும் நீங்கள் இந்தப் பயிற்சியை செய்யும் பொழுது தெளிந்த சிந்தனை உடையவராக உருவாகுகிறீர்கள்.

★ மேலும் புள்ளிக் கோலத்தை போடும் பொழுது உங்களது கண் ஒரு புள்ளியை கூர்ந்து கவனிப்பதால் உங்களின் கண்பார்வையும் அதிகரிக்கின்றது. இது உங்கள் கண்களுக்கு நீங்கள் கொடுக்கும் இன்னொரு பயிற்சியாகும்.

★ கோலத்தின் மீது சாணி உருண்டையில் பரங்கிப் பூவைச் செருகி வைத்து அழகு பார்க்கும் மரபும் நம்மிடம் உண்டு. மறுநாள் அதைச் சுத்தம் செய்து குப்பைக்குச் செல்லும்போது மாக்கோல மாவும், பூவும்,சாணியும் அருமையான இயற்கை உரமாக மாறி, விளைச்சலை பெருக்குகிறது.

★ பசு சாணத்தாலோ, தண்ணீராலோ தெளிக்கும் போது வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது. இதனால் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது.