நெஞ்சம் அஞ்சவேண்டாம்

bookmark

பூமி எங்கும் செல்லுவோம்

நெஞ்சம் அஞ்சவேண்டாம் செய்தி எடுத்துரைப்பீர்
உங்களைத் தொடுகிறவன் எந்தன் கண்களைத் தொடுகிறவன்

 

1. அக்கினி கடலில் நின்றார் ஒரு முடியும் கருகவில்லை
சிங்கக் கெபியில் எறிந்தார் ஒரு சேதமும் காணவில்லை
உள்ளங்கை நடுவில் உங்களைக் கண்டேன்
உள்ளம் துவள வேண்டாம் அல்லேலூயா!

 

2. எக்காளம் ஊதவேண்டும் ஜாமக்காரரல்லவோ
இக்காலம் மௌனம் கொண்டால் குற்றம் நம்மேலல்லவோ
விசுவாச வீரரே வீறுகொண்டு எழுவீர்
பூமி எங்கும் செல்லுவீர் அல்லேலூயா!

 

3. எருசலேம் துவங்கி பூமி இறுதிவரை செல்லுங்கள்
குமரிக் கரை தொடங்கி வடதிசையின் சுவர் தொடுங்கள்
புறப்பட்டுச் செல்லுங்கள் சீடர்களாக்குங்கள்
திருச்சபையைக் கட்டுங்கள் அல்லேலூயா!