பரன் இயேசுவைக் காணாத உள்ளம்

bookmark

அடிபணிந்தேன் ஆண்டவரே!

பரன் இயேசுவைக் காணாத உள்ளம்
இந்தப் பாரினில் ஏராளம் உண்டு - 2
பாரதம் இயேசுவைக் கண்டிடவே
உயர் பணிக்காய் என்னைக் கொடுத்தேனே - 2

   

1. உம்பணி செய்ய ஆயத்தம் நான்
என்னை அனல்மூட்டி அனுப்பிடுமே
தாய் நாட்டுக்குத் தத்தம் செய்தேன்
என்னைத் தகுதிப்படுத்தி பயன்படுத்தும்
 
உம் அழைப்பின் தொனி கேட்டேன்!
உம் அன்பால் நிரப்பப்பட்டேன்!

   

2. பாவவழிச் செல்லும் மாந்தர்தனை
ஜீவவழி காட்ட வந்தேன் ஐயா
சாப இருள் நிறைந்த உள்ளமதில்
ஜீவ ஒளி ஏற்றவே வந்தேன் ஐயா
 
உம் அழைப்பின் குரல் கேட்டேன்!
உம் அழைப்பிற்கு அடிபணிந்தேன்!