தேவை நிறைந்தவர்கள் ஏராளம்

bookmark

தேவை நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம்
தாகம் நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம்
 
ஜெபித்திடுவோம் கொடுத்திடுவோம்
துரிதமாய் புறப்படுவோம்

1. பக்திக்கு இங்கே பஞ்சமில்லை - ஆனால்
பரலோகின் வழியைத்தான் அறியவில்லை
இயேசுவே வழியெனக் கூறிடுவோம்
களங்களைத் தேடிச் செல்வோம்

2. கானல் நீரை மதுரமென்றெண்ணி
மூர்ச்சித்து மடிவோர் எத்தனையோ
ஜீவத்தண்ணீரை கொடுத்திடுவோம்
நித்தியம் சேர்த்திடுவோம்

3. சிலைகளின் பாதம் பணிந்திடும் மாந்தர்
பலபல ஆயிரம் இங்கு உண்டே
கர்த்தரே தெய்வமென உயர்த்திடுவோம்
ஜாதிகள் சுதந்தரிப்போம்