தேவை ஆத்தும பாரம்

bookmark

தேவை ஆத்தும பாரம் கொண்டோர் என
தேவன் அழைப்பது கேட்கலையோ?
மாண்டிடும் என் ஜனம் மீட்டிடுவோம் என
வேண்டிடும் அவர் தொனி கேட்கலையோ?

 

1. எத்தனை சிறிது நம் வாழ்க்கை - அதை
அர்த்தமாய் வாழ்வது மேன்மை
மாசில்லா உண்மை தேவன்
இயேசுவுக்காகவே வாழ்வோம்
வாழ்வோம் நாம் வாழ்வோம்
இயேசுவுக்காகவே வாழ்வோம்    -  தேவை

   

2. கர்த்தரை சிறிதுமே அறியா
இந்தியர் கோடிகள் உண்டே
அத்தனை ஆத்துமா அழிந்தால்
எத்தனை வேதனை அவர்க்கே
உணர்வோம் நாம் உணர்வோம்
பொறுப்பினை இன்றே உணர்வோம் - தேவை

   

3. தரிசனம் பெற்றவர் கூட்டம்
வரிசையாய் புறப்படும் தருணம்
தரிசு நிலங்களில் எல்லாம்
பரிசுத்த வசனத்தை விதைப்போம்
செல்வோம் நாம் செல்வோம்
இன்றே புறப்பட்டு செல்வோம்     -  தேவை