தேவ அடிச்சுவட்டில் செல்லவே

bookmark

தேவ அடிச்சுவட்டில் செல்லவே
நான் தீர்மானித்தேன் இன்றே
அர்ப்பணித்தேன் நான் அகமகிழ்ந்தேன்  |
புது நோக்கம் என் வாழ்வினிலே  | 2 - தேவ

இயேசுவின் அன்பினையே நான்
அனுதினம் அனுபவித்தேன்
ஊற்றிடுவேன் என்னை பலியாக  |
அவர் அன்புக்கு பதிலாக   | 2 - தேவ

உலகத்தை முற்றிலுமாய் தினம்
சிலுவையில் அறைந்திடுவேன்
சிலுவையை  எடுத்தே பின் செல்வேன் |
அவர் காட்டும் பாதையிலே   | 2 - தேவ
 
இந்தியர் இயேசுவுக்கே என்ற
நோக்கத்தில் வாழ்ந்திடுவேன்
என் தலைமுறையை இயேசுவுக்கே  |
வரவழைப்பேன் சீக்கிரமே   | 2 - தேவ