சிலுவையில் மாண்ட இயேசுவே

bookmark

சிலுவையில் மாண்ட இயேசுவே என்றும் உன் தஞ்சம்
சிந்தனை செய்து சீக்கிரம் அவரண்டை வந்திடுவாய்

நாள்தோறும் நடத்திடுவார்
உன்னை நாதன் காத்திடுவார்
நேர்வழி சென்று புது  ஜீவன் கண்டு         |
சார்ந்திட அவரை நம்பிடுவாய்                | 2

பாவத்தில்  ஜீவிப்பவர்
பாதாளம் சென்றிடுவார்
நீயோ உன் நேசர் இயேசுவின் சாந்த   |
வார்த்தையை நம்பி வந்திடுவாய்            | 2

ஏன் இந்த வேதனையோ
இனி நீங்கி வான்ழ்ந்திடாயோ
இயேசு சுமந்தார் யாவும் உனக்காய்    |
சிந்தினார் இரத்தம் வந்திடுவாய்           | 2