என்னையே உம் கைகளில்

bookmark

என்னையே  உம்  கைகளில்
அர்ப்பணம்   செய்கின்றேன்   நான்
என்னிலுள்ள  எல்லாமே
சிலுவையில்   வைக்கின்றேன்.

          அங்கீகரியும்  இயேசு  நாயகா
          உந்தன்   நாமம் அறிவிப்பேன்
          ஜீவனுள்ள   நாளலெல்லாம் உண்மையாய்
          உமக்காய்   நான்  வாழுவேன்

என் கையில்  நீர் தந்திட்ட 
தாலந்துகள்   எல்லாம்   நான்
உந்தன்  பணி  செய்திட
இதோ  அர்பணிக்கின்றேன்              -- அங்கீகரியும்

எங்கே  நீர்  அழைத்தாலும்
அங்கே  நான் பின் செல்லவே
இந்நேரமே  என்னையே
அர்ப்பணம்    நான் செய்கின்றேன்     -- அங்கீகரியும்
      
உந்தன்  அன்பின் ஆழத்தால்
எந்தன் உள்ளம் பொங்குதே
உந்தன்  ஆவி பெலத்தால்
என்னை முற்றும்  நிரப்பும்                 -- அங்கீகரியும்