தாவீதின் கோத்திரனே

bookmark

தாவீதின் கோத்திரனே
தாகத்தை தீர்ப்பவனே
மா அன்பு இயெசுவே
மா தேவ பாலனே
மா அன்பு எங்கள் இராஜனே

வான் வெள்ளி தோன்றும் அந்த வேளையில்   |
வான் மன்னன் இயேசு இன்று தோன்றினார்  | 2
வான் மூப்பர் விரைந்து அங்கு ஏகினார்          |
வல்லவன் பதம் பணிந்து வாழ்த்தினார்           | 2

நீதி தேவன் இயேசு இராஜன் காண்கிறார்   |
நீதி நல்கி நியாயம் தீர்க்க போகிறார்            |  2
நீதி நின்று வாழும் அன்பு மாந்தரை                |
நீதி கிரீடம் சூட்டி அன்று வாழ்த்துவார்         |    2