உள்ளத்தின் ஆழத்தில் ஒரு சந்தோசம்

bookmark

அதை எண்ணும் போதெல்லாம் ஒரு சங்கீதம்
என் இயேசுவே என் தெய்வமே
உன்வார்த்தையே என்வாழ்வையே உனதாக அழைக்கின்றதே-2

1. உள்ளக் கதவைத் திறந்து வைத்து
உந்தன் குரலைக் கேட்கின்றேன்
உனது இனிய மொழியும் எனிலே நம்பிக்கை தீபங்கள் ஏற்றுதே(2)
உன்வழி தொடரவே தயக்கமோ தடுக்குதே
தயக்கமும் நீங்கினால் தடைகளே இல்லையே
அன்பே இறைவா அருளைப் பொழிவாயே

2. உந்தன் நினைவாலே உயிரை வளர்க்க
அன்பால் இதயம் துடிக்கணும்
மனித இதயக் காயங்கள் மறைய
என் வாழ்வே மருந்தாய் மாறணும் (2)
நண்பர்கள் சூழவே என் சுயநலம் மறையணும்
உறவுகள் நிலைக்கவே தியாகத்தில் வளரணும்
அன்பே இறைவா அருளைப் பொழிவாயே