உறவெல்லாம் நீயே என் உணர்வெல்லாம் நீயே

bookmark

உறவாட உனையன்றி உறவேதும் இல்லையே (2)
உறவெல்லாம் நீயே

1. விண்வாழும் தெய்வம் என் உள்ளம் தேடி
தன் வாழ்வைத் தாழ்த்தி வந்திடும் வேளை
என் வாழ்வில் இதுதானே பொன்னான திருநாள்
என்னென்ன ஆனந்தம் இதுவே சந்தோசம்
எனைக் காக்கும் தெய்வம் நீரன்றோ தேவா - 2
உனைப் போன்ற உறவு இவ்வுலகத்தில் இல்லை

2. இறைவா என் ஆன்மாவின் உயிர் காக்கும் விருந்தாய்
விரைவாய் நீ வருவாயே நோய் தீர்க்கும் மருந்தாய்
ஒருபோதும் உனைவிட்டுப் பிரியாத உறவாய்
உன் பாதம் அமர்ந்து உன் மொழி கேட்பேன்
உயிருள்ள நாள்வரை உமக்காக வாழ்வேன் - 2
உனைப் போன்ற உறவு இவ்வுலகத்தில் இல்லை