இயேசுவே உம் வரவை நித்தம்

bookmark

இயேசுவே என் ஏக்கம்

இயேசுவே உம் வரவை நித்தம் எண்ணி வாழ்கிறேன்
உமது அழகு வதனம் காண துடிதுடிக்கிறேன்
மகிமையான உந்தன் வீட்டை வாஞ்சித்திருக்கிறேன்
தங்க பூமீ அதில் நடக்க ஆசைப்படுகிறேன் - 2
 
இயேசையா நீர் எந்தன் ஏக்கமையா
இயேசையா எனக்கு எல்லாமே நீர் தானையா - 2
   
1. எனது பாவ சுமைகள் நீங்கி விடுதலை பெற்றேன்
மரித்துயிர்த்த தேவனுக்காய் பிழைத்திருக்கிறேன்
சகலமானவர்க்கும் தேவ தூது சொல்கிறேன்
மரணம் வரை கீழ்படிந்து வாழவிருக்கிறேன் - நான் - 2
 
2. தேக பலன் ஒடுங்கினாலும் சோர்வு நீங்கினேன்
ஆவி மனிதன் பெலன் பெறவே மகிழ்ந்திருக்கிறேன்
பரம வாசல் ஸ்தலத்தை நாளும் ஏங்கித் தவிக்கிறேன்
மரண அச்சமின்றி நித்திய வாழ்வை தொடர்கிறேன் -நான்-2
   
3. உலகின் வாசம் கொஞ்சம் காலம் அறிந்திருக்கிறேன்
தேவ பிரியம் செய்வதே என் ஆவலாக்கினேன்
கணக்கு கேட்கும் கர்த்தர் முன்பு நிற்கும் நாளிலே
மகிழ்ச்சி பொங்க பரிசளிப்பார் மகிமைப்படுத்துவார் - என்-2