இயேசுவே தெய்வம் என்றால்!

bookmark

இயேசுவே தெய்வம் என்றால்!
இயேசுவே தெய்வம் என்றால்
துணிந்து செல்லுங்கள் பணிந்து சொல்லுங்கள்
இயேசுவே தெய்வம் என்றால்
  
1. காலத்தைப் பார்த்தால் போதகனாய்
வாழ்வு மிளிர்ந்திட வேண்டிய நீ
ஆரம்பப் பாடங்கள் அறிந்தபின்னும்
அறியாக் குழந்தைபோல தவறுவதேன்?
   
2. தீயாய் வெடித்துப் பரவாமலே
திருச்சபை மயங்கித் தூங்குவதேன்?
சுற்றும் நிகழ்ந்திடும் சங்கதிகள்
மறந்தவள் நித்திரை கொண்டது ஏன்?
  
3. பரிசேயர் பண்டிதர் நீதியிலும்
பாரதப் புதல்வர்கள் பக்தியிலும்
உன் நீதி பக்தி மிஞ்சாவிட்டால்
இயேசுவைச் சொல்வதை நிறுத்திவிடு

4. தேசத்தில் காண்கிற சலனங்களை
தீமை எதிர்ப்பு சக்திகளை
அஞ்சாமல் எதிர்த்து முன்னேறிச்செல்
வென்றவர் உன்னோடு என்றும் துணை.