இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
அல்லேலூயா - 4 (2)
ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலூயாஅல்லேலூயா
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
சாவின் கூரை தகர்த்தெரிந்தார்
வேதவாக்கியம் நிறைவேற
உடலோடு உயிர்த்தெழுந்தாரே
அல்லேலூயா (6)
அல்லேலூயா (4)
1. பாவம் சாபம் போக்க யேசு
இரத்தம் சிந்தி மரித்தார்
உலகோரை ஒன்று ஆக்க
உயிரோடு எழுந்தார்
2. அமைதி உன்னில் ஆள என்றும்
இயேசு அன்பு ஈந்து
அகிலம் படைத்த தேவனே
இன்றும் என்றும் வாழ்கின்றார்
