ராஜ ராஜ தேவ ராஜன் யேசு மகாராஜன்

bookmark

ராஜ ராஜ தேவ ராஜன் யேசு மகாராஜன் |
மகாராஜன் தான்    | 2

 ஏழ்மைக் கோலம்  எடுத்து
 பாவத்தை போக்க வந்தவர்
 பாலகனாய் பிறந்த நாள்

மண்ணின் நிந்தைகள் மடிந்து ஒழிய         |
விண்ணின் சிந்தைகள் புவி அறிய  | 2
அன்பின் நேசம்  என்றும் செழிக்க  |
யேசு பாலகனாய் பிறந்தார்  |

விழி தந்தையைக் கண்டு ஒளிர  |
மொழி பரமனின் புகழைப் பாட  | 2
வழி வேதத்தில் நிலைத்துத் திகழ  |
யேசு பாலகனாய் பிறந்தார்  |