மெய்த்தேவனைத் துதி பெருநன்மை செய்தார்

bookmark

மெய்த்தேவனைத் துதி பெருநன்மை செய்தார்
குமாரனைத் தந்துன்னையே நேசித்தார்.
உன் பாவத்திற்காய் இயேசுவே மரித்தார்
நீ மோட்சத்தில் சேர ஆருயிர் தந்தார்

 போற்றுவோம்! போற்றுவோம்! ஜ“வ நாயகரை
 நம்புவோம்! நம்புவோம் லோக இரட்சகரை
 இம்மீட்பரின் மூலம் நற்கதியுண்டாம்
 பிதாவின் சமூகம் கண்டடையலாம்.

சம்பூரண மீட்பைச் சம்பாதித்தனர்
நல்லாசை உள்ளோருக்கு ஈவேன் என்றனர்
எப்பாவியானாலும் விசுவாசம் வைத்தால்
அந்நேரமே மன்னிப்புண்டாம் இயேசுவால்.
                       - போற்றுவோம்

பேரன்பின்  சொரூபி! மெய்த்தாசருக்கே
ஒப்பற்ற சந்தோஷத்தை அளித்தீரே!
ஆனாலும் பேரின்பத்தில் சேரும்போதோ
உண்டாகும் சந்துஷ்டிக்கு வரம்புண்டோ?
                       - போற்றுவோம்