உயிர்த்தெழுந்தேரே, அல்லேலூயா

bookmark

உயிர்த்தெழுந்தேரே, அல்லேலூயா!
ஜெயித் தெழுந்தாரே.
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே!

கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயல் இதுவே!         -உயிர்

மரித்தவர் மத்தியிலே
ஜ“வ தேவனைத் தேடுவாரே?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே!         -உயிர்

எம்மா ஊர் žஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம் மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
எல்லையில்லா பரமானந்தமே!              -உயிர்

மரணம் உன்  கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும், நோயையும், பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்.           -உயிர்