மாட்டுத் தொழுவில் கந்தை பொதிந்து

bookmark

மாட்டுத் தொழுவில் கந்தை பொதிந்து
தேவ மைந்தன் உறங்குகின்றார்
ஆரிரோ  பாடியே தூதர்கள் யாவரும்
மகிழ்வாய் சுதனை  பணிந்தனரே

1. சத்திரம் தேடியே தந்தையும் தாயுமாய்
   காடுமேடாய் ஓடி அலைந்தன்ரே
   பிஞ்சு  உருவம் மஞ்சம் கொள்ளவே
   கொஞ்சம்  இடமும் தருவாரில்லை

2. ஏழ்மையின் கோலமாய் தாழ்மையின் உருவாய்
   மரியின் மகனாய் பிறந்தனரே
   ஏசு என்னும் ஓர்   நாமத்திற்கிணையாய்
   வேறோரு நாமம் இவ்வுலகில் இல்லை

3. பாவியாய்  எம்பாவம் போக்கவே பாரினில்
   பாலகன் இப்புவி  வந்தனரே
   மரித்து உயிர்த்து ஜெயித்த இரட்சகர்
   ஏசுவே உம்பாதம் தஞ்சமென்போம்.