நீங்காதிரும், என் நேச கர்த்தரே
நீங்காதிரும், என் நேச கர்த்தரே,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
மற்றோர் ஒத்தாசை அற்றுப்போயினும்
நீர் மெய்ச் சகாயரே, நீங்காதிரும்.
நீர் மேலே குமிழ்போல் என் ஆயுசும்
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;
கண் கண்ட யாவும் மாறிப்போயினும்
மாறாத கர்த்தரே, நீங்காதிரும்
நீர் கூட நின்று தாங்கி வாருமேன்,
அப்போது தீமைக்கு நான் தப்புவேன்;
நீர் என் துணை, என் பாதை காட்டியும்
என் இன்ப துன்பத்தில் நீங்காதிரும்
நான் அஞ்சிடேன் நீர் கூடத்தினால்
என் க்லேசம் மாறும் உம் ப்ரசன்னத்தால்
சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
என்றா வாரிப்பேன்; நீங்காதிரும்
