இரத்த காயம் குத்தும் நிறைந்து நிந்தைக்கே

bookmark

1.இரத்த காயம் குத்தும் நிறைந்து நிந்தைக்கே
  முட்க்ரீடத்தாலே சுற்றும் குத்துண்ட சிரசே,
  முன் திவ்ய மேன்மை கொண்ட நீர் லச்சை
                                காண்பதேன்?
   ஐயோ! வதைந்து நொந்த உம்முன் பணிகிறேன்.

2. நீர் பட்ட வாதை யாவும் என் பாவ பாரமே;
  இத்தீங்கும் நோவும் சாவும் என் குற்றம் கர்த்தரே.
  இதோ! என்றைக்கும் சாக நான் பாத்திரம் ஆனேன்;
  ஆனாலும் நீர் அன்பாக என்னைக் கண்ணோக்குமேன்.

3. நான் உம்மைத் தாழ்மையாக வணங்கி, நித்தமே
   நீர் பட்ட கஸ்திக்காட துதிப்பேன், யேசுவே.
   நான் உம்மில் ஊன்றி நிற்க சகாயராய் இரும்;
   உம்மோடு நான் மரிக்க கடாட்சித்தருளும்.

4. என் மூச்சொடுங்கும் அந்த கடை இக்கட்டிலும்
  இப்பாவிக்காய் இறந்த உம்மையே காண்பியும்;
  அப்போது என்னைச் சேர்த்து உம் திவ்யமார்பிலே
  அணைத்துக்கொண்டு காத்து ஈடேற்றும் யேசுவே!