தொழுகிறோம் எங்கள் பிதாவே
தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதனால் சரணம் சரணம்
வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர்
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்பனே இதோ சரணம் சரணம்
கரங்கள் பொன் வளையங்கள் போல
நிறங்களும் தந்தத்தை போல
கால்களும் கல் து}ண்கள் போல
காண்பதாலே சரணம் சரணம்
அடியார்களின் அஸ்திபாரம்
அறிவிக்கெட்டாத விஸ்தாரம்
கூடிவந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம்
பார்த்தீபனே கன ஸ்தோதிரம்
கீர்த்தனம் மங்கள ஸ்தோதிரம்
வாழ்க வாழ்க என்றும்
அல்லேலு}யா ஆமென் ஆமென்
