தாவீதின் ஊரிலே

bookmark

தாவீதின்  ஊரிலே
மாட்டுக்  குடிலிலே
மீட்பர்  பிறந்துள்ளார்
வாரும்  ஆராதிப்போம்

1. ஆண்டவருக்காக  புதிய  பாடல்  பாடுங்கள்
    நீங்கள்  இன்று    அவரைப்  பாடுங்கள்
    ஆண்டவரைப்   போற்றுங்கள்
    அவர் பெயரை  வாழ்த்துங்கள்
    அவர்  பெயரை  வாழ்த்துங்கள்
    வாழ்த்துங்கள்-  (2)                -தாவீதின்


2.  அவர்  கொணரும்  மீட்பையே   அறிவியுங்கள்
    நீங்கள்  அவரின்  மாட்சி  சொல்லுங்கள்
    ஆண்டவர்  தம்  செயல்களை
    அனைவருக்கும்  கூறுங்கள் -  (2)
    அனைவருக்கும்  கூறுங்கள்
    கூறுங்கள் -  (2)                   -தாவீதின்