கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே

bookmark

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
தாழ்ச்சி அடையேன் என்றுமே
அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணிரண்டை நடத்துகிறார்   
 
ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்
தம் நீதியின் பாதையில் நடத்துகிறார்
 
மரண பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும் அஞ்சென்னே
கர்த்தர் என்ணோடென்றும் இருப்பதாலே
அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே

சத்துருக்கள் முன்பில் எனக்காக
பந்தி யொன்று ஆயத்தம் செய்தார்
என்னைதம் எண்ணெயால் அபிஷேகித்து என்
பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்