இயேசுராஜா உம் இதயத் துடிப்பை
இயேசுராஜா உம் இதயத் துடிப்பை
அறித்து கொள்ளும் பாக்கியம் தாரும்
உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற
கிருபையைத் தாரும்
ஒரு வாழ்வு அது உமக்காக - (2)
உணர்வெல்லாம் உமக்காக
உள்ளமெல்லாம் உமக்காக
1. உம் இதயம் மகிழ்ந்திட வாழ்ந்திட வேண்டும்
உம் சித்தம் செய்து நான் மடிந்திட வேண்டும்
2. அழிந்து போகும் ஆத்துமாக்கள் நனைத்திட வேண்டும்
ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும்
3. உலகத்திற்கு மரித்து நான் வாழ்ந்திட வேண்டும்
உண்மையான ஊழியனாய் உழைத்திட வேண்டும்
4. அகிலத்தையே உம் அண்டை சேர்த்திட வேண்டும்
அனைத்து மகிமை உமக்கே நான் செலுத்திட வேண்டும்
