இயேசு ராஜா ஏழை என் உள்ளம்

bookmark

 இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே
 
1.   என் நேசர் நீர்தானையா
என்னை தேற்றிடும் என தேசையா
சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
சீக்கிரம் வாருமையா - ஐயா
 
 
2.   உழையான சேற்றினின்று என்னை
உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது
அன்பாலே அணைத்துக் கொண்டீர் - ஐயா
 
 
3.   ஆபத்து காலத்திலே நல்ல
அநுக்கிரகம் துணையும் நீரே
அன்பே என்றீர் மகளே என்றீர்
மணவாட்டி நீதான் என்றீர்
 
 
4.   பரிசுத்த ஆவியினால் என்னை
அபிஷேகம் செய்தீரே
பயங்களை நீக்கி பலத்தையே தந்து
பரிசுத்த மகளாக்கினீர்