மூன்றாம் அதிகாரம்

bookmark

3. இடந்தலைப்பாடு

நூற்பா
பொழிலிடைச் சேறல் இடந்தலை சொன்ன
வழியொடு கூட்டி வருந்திசி னோரே.

1. பொழிலிடைச் சேறல்

என்னறி வால்வந்த(து) அன்றிது முன்னும்இன் னும் முயன்றால்
மன்னெறி தந்த(து) இருந்தன்று தெய்வம் வருந்தல் நெஞ்சே
மின்எறி செஞ்சடைக் கூத்தப் பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று மின்தோய் பொழிலிடத்தே. .. 49

கொளு
ஐயரிக் கண்ணியை ஆடிடத் தேசென்(று)
எய்துவன் எனநினைந்(து) ஏந்தல் சென்றது.

(கைம்மாறின்றிக் கருணை செய்தலால் இன்னமும் இவ்விடை இன்புறும் என்றது என்பதாம்)