ஆறாம் அதிகாரம்
6. முன்னுறவுணர்தல்
1. வாட்டம் வினாதல்
நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்துநெற் றித்தனிக்கண்
ஒருத்தன் பயிலும் கயிலை மலையின் உயர்குடுமித்
திருத்தம் பயிலும் சுனைகுடைந்(து) ஆடிச் சிலம்பெதிர்கூய்
வருத்தம் பயின்றுகொல் லோவல்லி மெல்லியல் வாடியதே. .. 62
கொளு
மின்னிடை மடந்தை தன்னியல் நோக்கி
வீங்கு மென்முலைப் பாங்கி பகர்ந்தது.
(சிவனது கருணையும் உயிரது தெளிவும் அருலேகண்டின் பதனுடன் வினாயது என்பதாம்)
