வெள்ளரி

வெள்ளரி

bookmark

வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.சூரிய ஒளியினால் கண்கள்  பாதிக்கபட்டு கண்களில் வலி  ஏற்படும்போது கண்களுக்கு மேலே வெள்ளரிக்காயை வைக்கலாம்.அப்படிச் செய்வதன் மூலம் கண்களை மட்டும் அல்லாமல் சருமத்தையும்  வெள்ளரிக்காய் குளிரச் செய்யும். வெள்ளரிக்காயை  அரைத்து சாறெடுத்து, அந்தச் சாற்றைக் ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து முகம்  முழுவதும் தேய்க்கலாம்.இவ்வாறு செய்யும் போது  முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பொலிவுடன்(Glowing Skin) காணப்படும்.