 
            பள்ளிக்கூடம்
 
                                                    பள்ளிக் கூடம் போகலாம்
பாடம் கொஞ்சம் படிக்கலாம்
பாட்டுப் பாடி ஆடலாம்
பரிசை அள்ளிச் செல்லலாம்
உடற்பயிற்சி செய்யலாம்
உடலை வளிமை யாக்கலாம்
நாலு நன்பர் கிடைக்கலாம்
நாளை அறிஞன் ஆகலாம்

 
                                            