வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை
ஜீவ வழிக்குள் வரவேற்போம்
வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை தந்து என்னை
வாழ வைத்த இயேசுவே
உமது நாமத்தை தேசம் எங்கிலும்
சுமந்து செல்லுவேன்ää சுவிசேஷம் கூறுவேன்
பாடுகள் சகிப்பேன்ää பரவசமடைவேன்
தேவ ஜனமாக ஜெபித்திட
சாத்தான் கோட்டைகள் தகர்ந்திட
தேசமும் உம்மை அறிந்திட
தேவனாலே யாவும் நடந்திட
1. பாதை தவறி அலைந்திடும் ஜனங்களை
உமது மந்தைக்குள் அழைக்கவே வந்தீர்
மன்னிப்பு விடுதலை தேவனின் சாயலை - 2
என் ஜனம் யாவும் அடைந்திடவே!
என் ஜனம் அணிந்திடவே!
2. மார்க்கம் அறியா திரிந்திடும் மனிதனை
நல் ஜீவ வழிக்குள் வரவேற்கவே வாழ்ந்திடும்
காலங்கள் பயன்பட வாழுவேன் - 2
இயேசுவைத் தீபமாய் ஏற்றிடவே!
இயேசுவை ஏற்றிடவே
