வாருங்கள் கொண்டாடுவோம் மகிழ்வுடன் பண்பாடுவோம்

bookmark

உன்னதத்தில் கடவுளுக்கு மகிமை ஓங்குக
பூவுலகில் நல்மனத்தோர்க்கமைதி ஆகுக (2)

1. இஸ்ராயேலரின் மேய்ப்பரே செவிசாயும் உமது வல்லமையே
தூண்டி எழுந்திடும் உமது வலக்கரத்தால் நட்ட திராட்சை நான்
என்றும் எப்பொழுதும் பாதுகாத்து அருளும்
திருவிண்களின்மேல் வீற்றிருப்பவரே ஒளிவீசி அருளும்
தேனிகள் இறைவனே எழுந்தே வாரும் கண்ணோக்கிப் பாரும் (2)

2. உமது வலக்கரத்தால் தேர்ந்தெடுத்த எம்மை
உமது கைவன்மை காத்து அருள வேண்டும்
உமைவிட்டு இனி நாங்கள் விலகிட மாட்டோம்
உமது திருப்பெயரைப் போற்றி வாழ்வோம்
இறுதி நாள்வரை உறுதி கொண்டிடும் உள்ளம் எமக்குத் தாரும்
இயேசு வருகையில் வீசும் ஒளியினை ஏற்றிடச் செய்யும் (2)