வானமெங்கும் தூதர்களெல்லாம்
வானமெங்கும் தூதர்களெல்லாம்
ஆர்ப்பரிக்கும் காரணமென்ன?
சேனைகளின் கர்த்தர் பிறந்தார்
சின்ன மாட்டுத் தொழுவத்திலே
( வான )
ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
இயேசுநாமம் வாழ்கவென்றே
அல்லேலூயா
ஸ்தோத்திரிப்போம் ஸ்தோத்தரிப்போம்
இயேசுராஜா மீட்பரென்றே
அல்லேலூயா (வான )
இஸ்ரவேலே இஸ்ரவேலே
களி கூர்வோம் ராஜா வந்தார்
அல்லேலூயா
ஜெருசலேமே ஜெருசலேமே
இம்மானுவேல் நம்மில் வந்தார்
அல்லேலூயா (வான )
