யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே
யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே
உமக்கே ஆராதனை (2)
யெகோவா யீரே தேவைகளை சந்திப்பீர் உமக்கே ஆராதனை (2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூ அல்லேலூ அல்லேலூ (2)
1. ஜெபத்தின் காரணரே ஆராதனை
ஜெபிக்க வைத்தவரே ஆராதனை (2)
ஜெபமே சுவாசமே
ஜெபமே தீபமே (2)
ஜெபத்தின் வீரரே ஆராதனை (2)
2. அழகில் உன்னதரே ஆராதனை
அணைக்கும் ஆதரவே ஆராதனை (2)
அன்பின் ராஜனே
ஆத்தும நேசரே (2)
சாரோனின் ரோஜாவே ஆராதனை (2)
