மானிடரே! போற்றுங்களே!
இயேசு மேலானவர்
மானிடரே! போற்றுங்களே!
மாநிலத்தில் பறைசாற்றுங்களே!
மேலானவர் இயேசு மேலானவர்
ஆகாயம் பூமிக்கும் மேலானவர் - 2
1. இருளில் ஒளியும் இயேசு - நம்
இதய விளக்கும் இயேசு
மருள்வோர் வழியும் இயேசு - அவர்
மனதின் உறுதி இயேசு
அருளின் சுனையும் இயேசு - உயர்
அன்பின் பொருளும் இயேசு
2. உலகம் அவரால் வாழும் - அதில்
உயிர்கள் புனிதம் ஆகும்
பலரின் வாழ்வு மாறும் - பாவப்
பழிகள் யாவும் தீரும்
நிலவும் மகிழ்ச்சி நாளும் - இனி
நிறையக் குடும்பம் தோறும்
3. அலைகள் வாழ்வில் மோதும் - பலர்
அழிவைக் காண நேரும்
மலைகள் பெயர்ந்து போகும் - பலர்
மனங்கள் பயந்து சாகும்
நிலையாய்க் கரங்கள் கோர்ப்பார் - நம்மை
நிஜமாய்க் கரையில் சேர்ப்பார்
