மங்களம் மங்களம் மங்களமே

bookmark

மங்களம் மங்களம் மங்களமே (2)

மணமக்கள் மாண்புரவே
மணவாழ்வு இன்புரவே
மணவாளன் இயேசுவின்
மாசில்லா ஆசியால்
மணமக்கள் இணைந்திடவே
ஆ..ஆ..ஆ..

ஆதாமும் ஏவாளோடும்
ஆபிரகாம் சாராளோடும்
ஆதியில் ஆண்டவன்
அனாதி திட்டம்போல்
ஆண்பெண்ணும் சேர்ந்திடவே
ஆ..ஆ..ஆ..

இல்லறம் நிலங்கிடவே
நல்லறம்  தொலங்கிடவே
வல்லவன் வான்பதன்
வழிகாட்டும் வார்த்தையில்
பல்லாண்டு வாழ்ந்திடவே
ஆ..ஆ..ஆ..