போற்றுவேன் ஆண்டவா உம்மை

bookmark

மனதாரப் போற்றிடுவேன் (நான்) - 2
மாட்சிமை நிறைந்த மன்னவன் நீ
ஆட்சியும் அரசும் உள்ளவன் நீ - 2

1. பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழிகளிலும்
உந்தன் வலிமையும் உறுதியும் உண்டு
தீயவரின் தோல்வியிலும் பகைவர்களின் வீழ்ச்சியிலும்
உந்தன் மேன்மையும் நீதியும் உண்டு

2. வானத்திலே வெண்ணிலவை விண்மீன்களை அமைத்தீரே
மனிதனுக்காக அமைத்தீரே
பூமியிலே பறவைகளை விலங்கினத்தைப் படைத்தீரே
மனிதன் ஆண்டிட அழைத்தீரே