பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பாரினை மீட்டிட பரமன் இயேசு
பரிசுத்தராய் பிறந்தார் (2)
1. நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் நன்மைகள் பெருகிடவே
நமக்கொரு குமாரன் ஈவானார் நீதியாய் ஆகிடவே
யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்திடவே இப்பூமியில் ஒளிதரவே - இன்று
- பிறந்தார்
2. சாத்தானின் சேனை வீழவே சத்தியம் நிலைத்திடவே
காரிருள் பாவங்கள் நீக்கவே கிருபையும் பெருகிடவே
தேவ குமாரன் ஜெயமனுவேலன் தாழ்மையின் ரூபமானார் - இன்று
- பிறந்தார்
