பாவ துக்கம் தாங்கும் நண்பர்
பாவ துக்கம் தாங்கும் நண்பர்
யேசுவில் நமக்குண்டே!
யாவற்றையும் தேவனிடம்
கூறும் சிலாக்கியம் பெற்றோமே!
நாம் சமாதானம் இழந்து
வேதனை அடைகிறோம்
ஏனெனில் நாம் தேவனிடம்
கூறாததனாலேயே!
துன்பம் சோதனை வந்தாலும்
கஷ்டம் எங்கும் நேர்ந்தாலும்
நாம் பயப்படவே வேண்டாம்
மீட்பரிடம் ஜெபிப்போம்
நம் துக்கம் பகிர்ந்து கொள்ளும்
உண்மை நண்பம் வேறுண்டோ?
இயேசு அறிவார் நம் நோவை
ஜெபிப்போம் அவரிடம்
பாவ பாரத்தோடுள்ளோமோ?
லோக கவலை உண்டோ?
மீட்பரே நம் மாறா தஞ்சம்
ஜெபிப்போம் அவரிடம்
நண்பர் வெறுத்துத் தள்ளினும்
ஜெபிப்போம் அவரிடம்
மார்பில் சேர்த்தணைத்துக்காப்பார்
ஆறுதல் நீ காணுவாய்!
