பார் நம் பாரதம் பார்!
நமது பாரதம்
பார் நம் பாரதம் பார்! பார் வறண்ட உள்ளம் பார்!
தூய்மை நாடும் கூட்டத்தார் பாவம் போக்க அலைகின்றார்
பார்! பார்! பார்!
சேர்! தூய சேனை சேர்!
சேர்! பார் மீட்கும் சேனை சேர்!
1. தேவனின் கரத்தினின்று வல்ல காரியங்களை
பெற்றுக்கொள்ள நீ எதிர்பார்
தேவநாம மகிமைக்கென்று பெரிய சாதனைகனை
திட்டம்தீட்டி செய்துவிடப் பார்!
2. தேவனின் ஒத்தாசையால் இந்த சந்ததி
நித்திய வாழ்வு பெற்று மகிழும் பார்
உந்தன் ஜெபத்தையும் உந்தன் முயற்சியையும்
தேவன் கனம் பண்ணுவார் பார்!
