பாடல்பாடி மகிழ்வேனே

bookmark

பாடி மகிழ்வோம்

பாடல்பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா!
பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா!
பாரில் வந்தாரே  தந்தாரே அன்பால் மீட்டாரே
பரிசுத்தரை நித்தியரை பாடி போற்றுவேன்
     
அல்லேலூயா பாடுவேன் நான் - 4

1. மகிமையின் இராஜா அவர் மகத்துவம் நிறைந்தவர்
மனமெல்லாம் நிறையுதே மகிழ்ச்சியில் சிலிர்க்குதே

2. கனிவான மேய்ப்பனவர் கண்மணிபோல் காப்பாரவர்
கீதங்களால் ஆராதிப்பேன்  ஐக்கியத்தில் ஆனந்திப்பேன்

      

3. நீதியுள்ள நீதிபரர்  மேகமீதில் வந்திடுவார்
நித்யானந்த வாழ்வினையே எனக்காக தந்திடுவார்