நீர் சொன்னால் போதும் செய்வேன்

bookmark

நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
     ஆராதனை இயேசுவுக்கே -4

கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்ல கவல
காற்றையும் கடலையும் அதட்டிய
உம் அற்புத வார்த்தைகள்
எந்தன் துணையாய் நிற்பதால் எனக்கேது கவல
      ஆராதனை இயேசுவுக்கே -4

பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்
பாதைகாட்ட நேசர் உண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து
சூழ்ந்து கொண்டாலும்
பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே
      ஆராதனை இயேசுவுக்கே -4