நித்திய இராஜியம்
நித்திய இராஜியம்
நிலை மாறாத இராஜாங்கம் - அது
இயேசுவின் அரசாங்கம் - அதை
அசைக்கவே முடியாது - அது
அழியாத சாம்ராஜியம்
1. இந்திய மண்ணில் விந்தையாய் மலரும்
இயேசுவின் திருக்குடும்பம் ஜாதிகளெல்லாம்
சீஷர்களாவார் சீக்கிரம் நடந்தேறும் - அது
2. சத்திய சாட்சிகள் இரத்தம் சிந்தவும்
அச்சம் அகற்றி நிற்கும் தீவிர சேனை
இயேசுவின் பின்னே சபையாய் அணி திரளும் - உடன்
3. வாய்ப்பின் கதவுகள் தாளிடும் காலம்
முடிவுக்கு அடையாளம் காலத்தை கணிப்போம்
கதிரை அறுப்போம் களஞ்சியம் சேர்த்திடுவோம்
