நான் நானே கர்த்தர்

bookmark

நான் நானே கர்த்தர்
நான் நானே தேவன்
என்னாலன்றி இரட்சிப்பு இல்லை
என்னாலன்றி மீட்பும் இல்லை
பெயர் சொல்லி அழைத்தேன்
கரம் பிடித்திழுத்தேன் - நான்

1. நீ தண்ணீரைக் கடக்கும்போது - நான்
உன்னோட இருப்பேன்
நீ ஆறுகளை கடக்கும்போது அது
உன் மேல் புரளாது
அக்கினி ஜுவாலை உன்னை அழிக்காது
நீ என் பார்வைக்கு அருமையாய் இருப்பாய்

2. மா மலைகள் விலகினாலும் - அந்த
மலைகள் சாய்ந்தாலும்
இந்த பூமி மாறினாலும் - பெரும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
கிருபையோ உன்னை விட்டு என்றும் விலாகாது
சமாதான் உடன்படிக்கை நிலைபெயராது

3. இதோ இரட்சிக்கும் என் கரமோ அது
குறுகியே போகாது
நான் கேட்கவும் கூடாமல் செவி
மந்தமும் ஆகாது
பாவத்தை விட்டு விட்டு என்னண்டைக்கு வா வா
நானே உன் இயேசு உனக்காக மரித்தேன்