திருப்தியாக்கி நடத்திடுவார்

bookmark

திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளை சந்திப்பார்
மீதம் எடுக்க வைப்பார்
பிறருக்கு கொடுக்க வைப்பார்
 
பாடி கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்
 
1.  ஐந்து அப்பங்களை
ஆயிரமாய் பெருகச் செய்தார்
ஐயாயிரம் ஆண்களுக்கு
வயிராற உணவளித்தார்
 
2.  பொன்னோடும் பொருளோடும்
புறப்படச் செய்தாரே
பலவீனம் இல்லாமலே
பாதுகாத்து நடத்தினாரே - ஒரு
 
3.  காடைகள் வரவழைத்தார்
மன்னாவால் உணவளித்தார்
கற்பாறையை பிளந்த
தண்ணீர்கள் ஓடச்செய்தார்
 
4.  நீடிய ஆயுள் தந்து
நிறைவோடு நடத்திடுவார்
முதிர் வயதானாலும்
பசுமையாய் வாழச் செய்வார்
 
5.  கெம்பீர சத்ததோடு
ஆரவார முழக்கத்தோடு
தெரிந்து கொண்ட தம் மக்களை
தினமும் நடத்தி சென்றார்
 
6.  துதிக்கும்போதெல்லாம்
சுவையான உணவு அது
ஆத்மா திருப்தியாகும்
        ஆனந்த ராகம் பிறக்கும்