தினம் தினம் வலம் வரும் எங்கள் காலடி

bookmark

நலம் தரும் வளம் தரும் தெய்வத் தாளடி (2)

1. சரண் என்று தேடினால் தோன்றித் தேற்றுவார்
அரண் நாமே அஞ்சற்கென்று ஆற்றல் நல்குவார் (2)
வரம் கோடி நாளும் தந்து வாழச் செய்குவார் - 2
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி நாளும் பாடுவோம்

2. கரையின்றி துன்பம் வாழ்வில் நாளும் தோன்றினும்
மறைந்திடும் மலர்ந்திடும் இன்பம் வாழ்விலே (2)
இறைகரம் தரும் வரம் போதும் வாழ்விலே - 2
கறைபோக்கி குறை நீக்கி வாழ்வோம் பாரிலே