தாவீதின் மைந்தனே ஓசன்னா!

bookmark

இயேசுவே நீர் எங்கள் ராஜா

தாவீதின் மைந்தனே ஓசன்னா! ஓசன்னா!
சாலேமின் இராஜாவே ஓசன்னா! ஓசன்னா!
    
ஓசன்னா - 8

    

1. நிஜமான இராஜா வந்தார்
ஏரோது அலறிப்போனான்!
சகரியா சொன்னது போல
சரியாக நடக்குது பாரு!
ஊரெல்லாம் அவரின் பின்னே
திண்டோடிப் போகுது பாரு!
உயர்த்திடும் நேரம் வந்தால்
போகாமல் என்ன செய்யும்!

   

2. பணிவாகக் கழுதை மேலே
மேசியா வருவதைப் பார்த்து
பொறுக்காத போலி கும்பல்
தடுக்காமல் என்ன செய்யும்!
ஈசாயின் வாரிசு வந்தார்
சபை ஏனோத் தடை சொல்லுது
புகழ்வோரை தடுத்தால் போதும்
கல்கூடப் போற்றும் தானாய்!

   

3. ஜெபவீடு என்வீடென்றார்
பொறுப்பானோர் கொள்ளையடித்தார்
உபதேசம் செய்ய வந்தார்
உரிமை உனக்கேது என்றார்!
தோட்டத்தின் அதிபதி வந்தால்
புறம்பாக்கிக் கொல்லவும் செய்வார்
உருண்டு வரும் கன்மலை அவரை
தெரியாமல் எதிர்ப்பது முறையா?

  

4. ஊழியரைக் கொல்லும் தொழிலே
ஊழியமாய் கொண்டனர் பக்தர்
கண்கலங்கப் பாவிகள் நம்மை
தாயாக அணைக்கவே வந்தார்
கனலானது கயவர் கண்ணும்
திரண்டெழுந்தார் கொல்லும் பகையில்
பஸ்காவின் பண்டிகை நாளில்
சிலுவைக்கே கொண்டும் சென்றார்

 

5. சிம்மாசனம் ஏறப்போகும்
இராஜாவின் நேரம் வந்தது
சிலுவை அவர் ஆட்சிப்பீடம்
முள்முடிதான் அவரது மகுடம்
உன்னதமே மகிமை கொள்ளும்
பரலோகில் அமைதி நிலவும்
கர்த்தரையே புகழ்வோம் நித்தம்
இராஜாவைத் துதிப்போம் என்றும்