தலைமுறை தலைமுறையாக நீரே எங்களுக்குப் புகலிடம்

bookmark

இறைவா எம் இறைவா நீரே எங்களுக்குப் புகலிடம் (2)

1. மலைகள் தோன்றும் முன்பே இம்மண்ணும் தோன்றும் முன்பே
காலகாலமாய் இருக்கின்றீர் உம் கட்டளையின்படி நடத்துகின்றீர்
ஆயிரமாயிரம் ஆண்டுகள் உமக்கு
நேற்றைய தினத்தைப் போலுள்ளது
ஒரு இரவு சாமத்தைப் போன்றுள்ளது
ஆண்டவரே என் ஆண்டவரே உம் ஊழியன்
என்மீது இரக்கம் வையும் - 2
தேவனே திரும்பி வாரும், என் மீது இரக்கம் வையும்

2. காலைதோறும் உம் பேரன்பால் எங்களுக்கு நிறைவளித்தருளும்
உமது மாட்சிமை விளங்கும் உமது அருள் எம்மில் தங்கிடுமே
உந்தன் தயவு எம்மில் நிறைந்திடுமே
ஆண்டவரே என் ஆண்டவரே என் செயல்களில்
எனக்கு ஜெயம் தாரும்