சிலுவையே நல்மரமே

bookmark

சிலுவையே நல்மரமே
அதன் நிழல் அடைக்கலமே
கலங்காதே அழுதிடாதே
இயேசு உன்னை அழைக்கின்றார்
 
1.  துன்ப நெருக்கடியில்
    சோர்ந்து போனாயோ
    அன்பர் இயேசு பார்
    அணைக்கத் துடிக்கின்றார்
 
2.  பாவச் சேற்றினிலே
    மூழ்கி தவிக்கின்றாயோ
    இயேசுவின் திருரத்தம்
   இன்றே கழுவிடும்
 
3.  வியாதி வேதனையில்
    புலம்பி அழுகின்றாயோ
    இயேசுவின் காயங்களால்
   இன்றே குணம் பெறுவாய்