கோணலும் மாறுபாடுமான
கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்
இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்
ஆயத்தம் ஆயத்தமாவோம்
1. முணுமுணுக்காமால் வாதாடாமல்
அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்
2. ஜீவ வார்த்தைகள் பிடித்துக் கொண்டு
சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம்
3. இயேசுவைப் போல் இருப்போம் வருகையிலே - அவர்
இருப்பது போல அவரைக் காண்போம்
4. அற்பமான நம் சரீரங்களை
மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார்
5. வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற
பெருமையடைவோம் அவர் வருகையிலே
6. பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு
வருவதை எதிர்பார்த்து காத்திருப்போம்
